தீபாவளிப் பண்டிகை.. தமிழகத்தில் 6,493 பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பம் - 6,218 கடைகளுக்கு அனுமதி!

 
தீபாவளி பட்டாசு கடைகள் கடை

வரும் நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தற்காலிக மற்றும் நிரந்தரப் பட்டாசு கடைகள் அமைப்பதற்காகத் தீயணைப்புத் துறைக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன.

நடப்பாண்டு தீபாவளியையொட்டிப் பட்டாசு கடைகள் அமைக்கத் தீயணைப்புத் துறைக்கு மொத்தம் 9,995 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இதில் 3,495 நிரந்தரக் கடைகளுக்கான விண்ணப்பங்களும், 6,493 தற்காலிகக் கடைகளுக்கான விண்ணப்பங்களும் அடங்கும்.

பட்டாசு

பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவரை 6,218 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் 420 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன; மீதமுள்ள 3,357 விண்ணப்பங்கள் கள ஆய்வுக்குப் பிறகு பரிசீலனையில் உள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,778 நிரந்தர மற்றும் 14 தற்காலிகக் கடைகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 நிரந்தர மற்றும் 865 தற்காலிகக் கடைகள். சேலம் மாவட்டத்தில் 22 நிரந்தர மற்றும் 715 தற்காலிகக் கடைகள்.

பட்டாசு

தலைநகர் சென்னையில் 453 தற்காலிகப் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், இதுவரை 35 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பட்டாசு கடைகள் அமைக்கக் கூடுதலாக விண்ணப்பங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டாசு கடைகள் அமைப்பதற்குத் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையின் தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.