ஆசிய பாரா விளையாட்டு போட்டி: தங்கம் வென்ற தீப்தி ஜீவஞ்சி! புதிய சாதனை படைத்து அசத்தல்

 
தீப்தி

 

 

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டு போட்டியில், இந்திய வீராங்கனை தீப்தி ஜீவஞ்சி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மகளிர் 400 மீட்டர் டி20 பிரிவு இறுதிப்போட்டியில் தீப்தி ஜீவஞ்சி 56.36 வினாடிகளில் இலக்கைக் கடந்து முதலிடம் பிடித்தார். இதன் மூலம் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் புதிய சாதனை நேரத்தைப் பதிவு செய்தார். 23 வயதான தீப்தி, ஏற்கெனவே தகுதிச்சுற்றில் சாதனை நேரத்தைப் பதிவு செய்திருந்த நிலையில், இறுதிப்போட்டியில் அதைவிட வேகமாக ஓடி தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

 

ஜப்பான் வீராங்கனை நினா கன்னோ 58.92 வினாடிகளில் இலக்கைக் கடந்து வெள்ளிப் பதக்கமும், அகானே கato 1 நிமிடம் 0.26 வினாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர். தீப்தியின் வெற்றி இந்திய அணிக்கு போட்டியின் இரண்டாவது நாளில் கிடைத்த முதல் தங்கமாக அமைந்தது