மான் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி!
உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூரில் சாலையோரத்தில் இருந்த புதரில் இருந்து திடீரெனப் பாய்ந்து வந்த காட்டு மான் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் நிலை தடுமாறித் தூக்கி வீசப்பட்டார். எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தால் அதிர்ச்சியடைந்த அவர் சாலையில் கீழே விழுந்தபோது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது. லாரி சக்கரத்தில் சிக்கிய அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே மிகத் பரிதாபமாக உயிரிழந்தார்.
மான் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி pic.twitter.com/sDimCMfRrN
— Dina Maalai (@DinaMaalai) August 5, 2026
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்துள்ளனர். தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்துத் தீவிரமாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் திடீரென விலங்குகள் குறுக்கிடுவதால் ஏற்படும் இது போன்ற விபத்துகள் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சொந்த ஊருக்குச் செல்லும்போது நடந்த இந்த விபத்தால் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் தகவலறிந்து கதறி அழுதுள்ளனர்.
