யுஎஸ் ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார் நடப்பு சாம்பியன் கார்லஸ்... பென் ஷெல்டன் வரலாற்று வெற்றி!

 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் கார்லஸ் அல்காரஸ்  பென் ஷெல்டன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் சொந்த நாட்டு வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டனை எதிர்த்துப் போட்டியிட்டார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கடும் போராட்டத்திற்குப் பிறகு 6-7, 6-1, 6-3, 1-6, 7-6 என்ற செட் கணக்கில் கார்லஸ் அல்காரஸ் தோல்வியைத் தழுவினார்.

நடப்பு சாம்பியனான அல்காரஸை வீழ்த்தி பென் ஷெல்டன் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்ததுடன், இத்தொடரின் அரைஇறுதிப் போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளார்.