சுற்றுச்சூழல் விதிமீறல்: டேராடூனில் கே.எஃப்.சி. உட்பட 6 உணவகங்களுக்கு அதிரடி சீல்!

 
கேஎப்சி

 

உத்தராகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி, பிரபல உணவகமான கே.எஃப்.சி. (KFC) உட்பட 6 உணவகங்களுக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்துள்ளது. டேராடூன் ராஜ்பூர் சாலையில் அமைந்துள்ள இந்த 6 உணவகங்களுக்கும் விதிமீறல்கள் தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

KFC among six restaurants sealed in Dehradun over environmental violations | Mathrubhumi English

அந்த நோட்டீஸ்களுக்கு உணவக நிர்வாகங்கள் தரப்பிலிருந்து திருப்திகரமான பதில்கள் எதுவும் அளிக்கப்படாததைத் தொடர்ந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின் பேரில் அந்த உணவகங்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

Six restaurants, including KFC, sealed in Dehradun for violating environmental norms | India News

கே.எஃப்.சி. உணவகத்துடன் மோஜோ ரெஸ்டோ பார், லைஃப்ஸ்டைல், லெவல் ஒன் ரெஸ்டோ, ஏஎஸ் 4 மற்றும் டயப்லோ ஆகிய உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் விதிகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.