துணிகள் வந்த பார்சலில் மறைத்து கடத்தல்... டெல்லியில் 10.8 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

 
போதை

 

ஐரோப்பிய நாட்டிலிருந்து டெல்லிக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பார்சலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.8 கிலோ ஆம்பெட்டமைன் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

DRI Seizes 10.8 kg of Amphetamine Hidden in Postal Parcel from Europe; International Drug Smuggling Attempt Foiled - IBG News

புதுடெல்லியில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு வந்த சந்தேகத்திற்குரிய பார்சல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்தப் பார்சலை சோதனை செய்தனர். அதில் துணிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆரம்பகட்ட சோதனையில் சாதாரண ஆடைகள் மட்டுமே இருந்ததால் சந்தேகம் ஏற்படவில்லை.

தொடர்ந்து அட்டைப்பெட்டியை விரிவாக ஆய்வு செய்தபோது, அதன் நான்கு பக்கங்களிலும் தலா இரண்டு பிளாஸ்டிக் பைகள் என மொத்தம் 8 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த பொடியை பரிசோதித்ததில், அது ஆம்பெட்டமைன் போதைப்பொருள் என்பது உறுதியானது.

DRI Seizes 10.8kg Amphetamine at Delhi Foreign Post Office: Rediff Moneynews

இதையடுத்து 8 பொட்டலங்களையும் 1985-ம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தபால் சேவையைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்த முயன்ற கும்பலின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.