தந்தையின் வீட்டில் வசிக்க மகன், மருமகளுக்கு உரிமை இல்லை - உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
டெல்லி

பெற்றோருக்கு விருப்பம் இல்லாவிட்டால் அவர்களது சொந்த வீட்டில் பிள்ளைகள் தொடர்ந்து வசிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், முதியவரின் வீட்டில் வசித்து வரும் அவரது மூத்த மகனும் மருமகளும் 4 வாரங்களுக்குள் வீட்டைக் காலி செய்ய உத்தரவிட்டுள்ளது. முதியவர்கள் நிம்மதியாகவும் கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதி செய்வதே முக்கியம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது சொந்த வீட்டிலிருந்து மூத்த மகன் மற்றும் மருமகளை வெளியேற்றக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், வீட்டுக்குள் நடக்கும் பிரச்சினைகளைத் தனிப்பட்ட சாட்சியங்கள் மூலம் நிரூபிப்பது கடினம் என்றும் நீதிபதி அமித் மகாஜன் தெரிவித்துள்ளார்.

Delhi HC orders son, daughter-in-law to vacate 85-year-old father's house within 4 weeks | India News - News9live

முதியவர் தனது சொத்தைப் பாதுகாத்து, அதில் நிம்மதியாகவும் கண்ணியத்துடனும் வாழ வேண்டிய தேவையைத் தெரிவித்தாலே போதுமானது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். வீட்டைக் காலி செய்யத் தேவையான உதவிகளைப் போலீசார் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தத் தீர்ப்பு மூத்த குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய உத்தரவாகப் பார்க்கப்படுகிறது