இன்ஸ்டா பிரபலம் மீது ஒருதலைக் காதல்: வீடு தேடிச் சென்று ரகளை செய்த இளைஞருக்கு பயங்கர முடிவு!

 
இன்ஸ்டா

 

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் நேஹா பிஸ்ட் இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட சமூக வலைதளப் பிரபலமாக உள்ளார். அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், திருமண ஏற்பாடுகள் தொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்துள்ளார். இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம் காசிபூரைச் சேர்ந்த அபினவ் என்ற இளைஞர், நேஹாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.

A man from chennai was beaten to death, when he came to meet an influencer in Madhu Vihar, in East Delhi on Thursday, November 19, 2026. Express photo by Abhinav Saha

கடந்த 7-ம் தேதி டெல்லியில் உள்ள நேஹாவின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற அபினவ், தன்னைத் திருமணம் செய்து வைக்குமாறு கூறி அங்கிருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நேஹாவின் உறவினர்கள், அபினவ் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.தகவல் அறிந்து வந்த போலீசார், பலத்த காயமடைந்த அபினவை மீட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சை பெற்று வந்த அபினவ், கடந்த 15-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், நேஹாவின் தந்தை மற்றும் உறவினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். நேஹாவுக்கு அபினவ் பற்றி எதுவும் தெரியாத நிலையில், ஒருதலைக் காதல் விவகாரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.