டெல்லி மெட்ரோவில் குளியல் உடையில் தலையில் டவலுடன் பயணம் செய்த இளம் பெண்... வைரல் வீடியோ!
டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண் ஒருவர் வித்தியாசமான தோற்றத்தில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும், அவரது தோற்றம் மற்றும் செயல்பாடு குறித்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் குளியல் உடை போன்ற ஆடை அணிந்து, தலையில் டவல் கட்டியபடி மெட்ரோ ரெயிலில் அமர்ந்திருக்கிறார். மேலும், கண்களுக்குக் கீழே அழகுப் பராமரிப்புக்கான பேட்ச்களையும் ஒட்டியுள்ளார்.
மெட்ரோவா, அழகு நிலையமா?
ரெயிலில் பயணம் செய்தபடியே அவர் சருமப் பராமரிப்பில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சியைப் பார்த்த இணையவாசிகள், “இது மெட்ரோ ரெயிலா அல்லது அழகு நிலையமா?” எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சிலர் பொது இடங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், மற்றவர்கள் ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் குறித்து தேவையற்ற விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் கூறுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
