Breaking... டெல்லி பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை... கடிதத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை!

 
delhi

 

டெல்லியில் உள்ள பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியின் ஷாஹ்தரா மாவட்டம், கிருஷ்ணா நகரில் செயல்படும் பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவி, சனிக்கிழமை காலை பள்ளிக்கு வந்துள்ளார். காலை 11 மணியளவில் பள்ளி வளாகத்தில் தீக்காயங்களுடன் அவர் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Delhi School Student Death: दिल्लीतील सरकारी शाळेत १२ वीच्या विद्यार्थ्याचा जळालेला मृतदेह

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி எழுதி வைத்ததாகக் கூறப்படும் கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் மரணத்துக்கான காரணம் குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.