டெல்லி பல்கலைக்கழக கட்டிடம் இடிந்து விபத்து... பலி எண்ணிக்கை 7 பேர் பலி!
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே மாணவர்கள் தங்கியிருந்த 5 மாடி கட்டிடம் திடீரென நேற்று செப்டம்பர் 6ம் தேதி இடிந்து விழுந்தது. விபத்தின்போது தோராயமாக ஐம்பது மாணவர்கள் கட்டிடத்திற்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் திடீர் விபத்தில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏழு மாணவர்கள் உடல்நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மாணவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்குப் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
