மக்களவைத் தொகுதிகள் 850-ஆக உயர்வு? பாஜக - காங்கிரஸ் இடையே அனல் பறக்கும் மோதல்... வைரல் வீடியோ!

 
850

மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயர்த்துவதற்கான தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தேசிய அரசியலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இந்த மசோதா பாஜகவின் ஒரு தப்பிக்கும் திட்டம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவும், அரசியல் ஆதாயம் தேடவுமே இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.

Amit Shah Explains 850-Seat Lok Sabha Number After Opposition Criticism - YouTube

ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தக்க பதிலடி கொடுத்துள்ளார். மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் ஜனநாயகத் தேவைகளுக்கு ஏற்பத் தொகுதிகளைச் சீரமைப்பது காலத்தின் கட்டாயம் என்றும், எதிர்க்கட்சிகள் தேவையற்ற குழப்பத்தை விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்