அட... ஓடும் ரயிலில் பிரசவம்... ரயிலின் பெயரையே குழந்தைக்கு வைத்த பெற்றோர்!

 
ரயில்

சில நேரங்களில் விமானப் பயணங்களில் வானில் பறந்து கொண்டிருக்கும் போதே கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்து விடுவதுண்டு. அந்தக் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் குறிப்பிட்ட விமானத்தில் பறக்க  சலுகைகள் வழங்கப்படும். அந்த வகையில் தற்போது  ரயிலில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணிக்கு ரயிலிலேயே குழந்தை பிறந்துள்ளது.

ரயில்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்து விதிஷா நோக்கி  வெள்ளிக்கிழமை காலை மும்பை-வாரணாசி இடையேயான காமயானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில்  24 வயதான நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. சக பெண் பயணிகள் 2 பேர் உடனடியாக அவருக்கு பிரசவத்திற்கு உதவினர்.  அவருக்கு ரயிலிலேயே  அழகான பெண் குழந்தை பிறந்தது

ரயில்

விதிஷா ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் அங்கு ஏற்கனவே தயாராக இருந்த மருத்துவ குழுவினர் தாய், சேய் இருவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.இந்நிலையில்  ரயிலில் பிறந்த குழந்தைக்கு, அந்த ரயிலின் பெயரான காமயானி என்ற பெயரையே பெற்றோர்  சூட்டியுள்ளனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web