30 நாட்களுக்குள் சிலிண்டரை ஒப்படைக்க கெடு... தவறினால் கனெக்‌ஷன் கட் - மத்திய அரசு உத்தரவு!

 
சிலிண்டர் சிலிண்டர்

இந்தியாவில் உள்ள எல்பிஜி கேஸ் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு புதிய திருத்தப்பட்ட விதிகளை வெளியிட்டுள்ளது. இதன் படி, வீடுகளில் குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்பு பெற்ற நுகர்வோர், தங்களின் பழைய கேஸ் இணைப்பை 30 நாட்களுக்குள் கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய விதிகளின்படி, வீடுகளில் பைப்லைன் மூலமாக வழங்கப்படும் பிஎன்ஜி கேஸ் இணைப்பைப் பெற்றுப் பயன்படுத்தி வரும் நுகர்வோர், தங்களுக்கு ஏற்கனவே இருக்கும் எல்பிஜி சிலிண்டர் இணைப்பை அடுத்த 30 நாட்களுக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதியானது நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களான இன்டேன், பாரத் மற்றும் ஹெச்பி ஆகிய அனைத்து நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர்

மத்திய அரசு விதித்துள்ள இந்த 30 நாட்கள் காலக்கெடுவிற்குள் சிலிண்டரை ஒப்படைக்கத் தவறினால், நுகர்வோரின் கேஸ் இணைப்பு அதிரடியாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆன்லைன்  மூலமாகவோ அல்லது தங்களது நேரடி கேஸ் விநியோகஸ்தரிடமோ சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டரை ஒப்படைத்து விட்டு, அதற்கான மாற்று வவுச்சரைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோட்டு சிலிண்டர்

 இதுமட்டுமன்றி, சாதாரண எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கான முன்பதிவு கால இடைவெளியிலும் மத்திய அரசு சில அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, இனி புதிய சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.