“டெல்லியில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது” - ராகுல் காந்தி கைதுக்குத் தவெக கண்டனம்!

 
விஜய் ராகுல் டெல்லி

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தவெக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. டெல்லியில் மாணவர்களின் குரல் ஒடுக்கப்படுவதாகவும், ஜனநாயகம் அப்பட்டமாக நசுக்கப்படுவதாகவும் அக்கட்சி சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

டெல்லி சம்பவங்கள் குறித்துத் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் வினாத்தாள் முறைகேடு மற்றும் நீட் விலக்கு கோரி ஜனநாயக முறையில் போராடிய ராகுல் காந்தி மற்றும் மாணவர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்தது கண்டிக்கத்தக்கது. டெல்லியில் ஜனநாயகம் நசுக்கப்பட்டு வருகிறது.

மக்கள் மற்றும் மாணவர்களின் நியாயமான குரலை அடக்குமுறைகள் மூலம் ஒடுக்க நினைப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நீட் தேர்வால் மாணவர்கள் தொடர்ந்து சந்தித்து வரும் மன உளைச்சல் மற்றும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, நீட் தேர்வை உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.