"மாண்புமிகு முதலமைச்சர் விஜய்" வாசகத்துடன் ‘ஜனநாயகன்’ போஸ்டர் வெளியீடு!

 
ஜனநாயகன்

 

 

 

தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைத் குழுவினால் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாகப் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்தப் போஸ்டரில், ‘மாண்புமிகு முதலமைச்சர் விஜய்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு விவகாரங்களின் போது நிலவிய அரசியல் சூழலில், விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில்  கணிப்பு ஒன்றைப் பகிர்ந்து வந்தனர்.

ஜனநாயகன்

"ஒருவேளை 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே இந்தப் படம் ரிலீஸானால், திரையில் டைட்டில் கார்டில் வெறும் 'விஜய்' என்று மட்டுமே பெயர் இடம்பெறும். ஆனால், தேர்தல் முடிந்து தவெக வெற்றி பெற்ற பிறகு படம் ரிலீஸானால், 'முதலமைச்சர் விஜய்' என்றே டைட்டில் கார்டு மாறும்" என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் கூறி வந்தனர். 2026 தேர்தல் மாற்றங்களுக்குப் பிறகு, ரசிகர்கள் சொன்ன வார்த்தைகளை முதலமைச்சர் விஜய் தனது புதிய பட போஸ்டர் மூலம் நிஜமாக்கிக் காட்டியுள்ளார்.

'மாண்புமிகு முதலமைச்சர் விஜய்' என்ற  வாசகத்துடன் போஸ்டர் வெளியாகித் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.