நாளை உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு!! கொந்தளிப்பில் விவசாயிகள்!!

 
கடலூர்

கடலூர் மாவட்டம் மேல் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்கத்திற்காக  25000 ஏக்கர்   விவசாய நிலங்களை கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.  நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த செயல்பாடுகளுக்கு அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

என்.எல்.சி

இந்த எதிர்ப்புக்கள் போராட்டங்களாக உருவெடுத்தன.  என்எல்சி நிர்வாகத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  நெய்வேலியில் என்எல்சிக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்  முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. இதே சம்பவத்தை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ தலைமையில் நாளை  நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடலூர்

அதிமுக புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் நாளை நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி காவல்துறையினர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். தடையை மீறி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என  விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web