ராணுவப் பணியில் இணைந்து வரலாறு படைத்த டென்மார்க் இளவரசி !

 
டென்மார்க்

டென்மார்க் நாட்டின் அரச குடும்பத்தில் இருந்து முதன்முறையாக பெண் வாரிசாக ராணுவப் பணியில் இணைந்து இளவரசி இசபெல்லா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மன்னர் பிரடெரிக் எக்ஸ் மற்றும் ராணி மேரி ஆகியோரின் 19 வயது மகளான இவர், நாட்டின் புதிய ராணுவக் கட்டாய சேவைக் திட்டத்தின் கீழ் தனது சேவையைத் தொடங்குகியுள்ளார. அரண்மனை வாழ்க்கையைத் தவிர்த்துவிட்டு ராணுவ முகாமுக்குச் சென்றுள்ள அவர், பிற வீரர்களைப் போலத் தனக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை வேண்டாம் எனத் துறந்துள்ளார்.

டென்மார்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு சீர்திருத்தங்களின் அடிப்படையில் பெண்களுக்கும் கட்டாய ராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பள்ளிப் படிப்பை முடித்த கையோடு இளவரசி இசபெல்லா கார்ட் ஹுசார் ரெஜிமென்ட் பிரிவில் 11 மாத ராணுவப் பயிற்சியில் சேர முன்வந்துள்ளார். இதர இளம் recruits போல அனைத்துப் பயிற்சிகளிலும் தீவிரமாகப் பங்கேற்கும் அவர், அரசாங்கம் வழங்கும் மாதாந்திர ஊதியம் மற்றும் படிகளைப் பெற மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

Princess Isabella becomes first Danish royal woman to join military, turns down $40,000 - India Today

அரசின் சார்பில் வழங்கப்படும் ஊதியத்தை அவர் மறுத்துள்ளதால், அவரது ராணுவப் பயிற்சிக்கான செலவுகள் அனைத்தும் அவரது பெற்றோரின் சொந்தப் பட்ஜெட்டில் இருந்தே ஏற்கப்படும் என்று அரச குடும்பம் உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொதுப்பணிக்கு அரச குடும்பத்தினரும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்ற நோக்கில் அவரது இந்த முடிவு அமைந்துள்ளது. இளவரசியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைக்கு உலகெங்கிலும் உள்ள பொதுமக்களிடமும் இணைய பயனர்களிடமும் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.