துணை முதல்வர் கமல் சந்திப்பு... விரைவில் எம்பி., ஆகிறார்!

 
கமல் உதயநிதி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு  ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.  ஜூலை மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் போது கமல்ஹாசனுக்கு எம்பி பதவி கொடுக்க திமுக திட்டமிட்டு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.


அதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் வகையில்  சமீபத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில், திமுக அமைச்சர் பி.கே. சேகர் பாபு, மநீம தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்து இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.  
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின் பேரில்  இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பை தொடர்ந்து, இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மநீம தலைவர் கமல்ஹாசனை  நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். இந்த  புகைப்படங்களையும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

வருஷத்துக்கு ரூ. 11 கோடி!!  ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! கமல்ஹாசன் ஆவேசம்!


அதில் ” மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் – கலைஞானி கமல்ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்” என தெரிவித்துள்ளார்.  இதன் மூலம் அவருக்கு பதவி வழங்கப்போவது உறுதி எனவும் தகவல்கள் பரவி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!