சமபந்தி விருந்தில் பொதுமக்களுடன் உணவருந்திய துணை முதல்வர் !

 
விருந்து

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர்  அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவுநாளை ஒட்டி  அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின்  மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செய்தார்.

ஸ்டாலின்

இதற்காக வாலாஜா சலையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை பேரணியாக வந்து மரியாதை செலுத்தினார். மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்தார்.

உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில், அண்ணா நினைவு நாளை ஒட்டி, சென்னை பார்த்தசாரதி கோயிலில் பொது விருந்து நடைபெற்று வருகிறது. இந்த பொது விருந்தில் துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு  பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் இதில் கலந்துகொண்டார். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web