அதிர்ச்சி வீடியோ... மீண்டும் கோர விபத்து... தடம் புரண்ட ரயில் பெட்டிகள்!

 
தடம்புரண்ட ரயில்

 இந்தியாவில் சமீபகாலமாக அடுத்தடுத்து ரயில் விபத்து ஏற்பட்டு ரயில் பயணிகளை பெரும் கவலையுறச்செய்துள்ளன. அந்த வகையில் ராணி கமலாபதி சஹர்சா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் (ரயில் எண் 01663) மத்தியப் பிரதேசத்தின் இடார்சியில் உள்ள ராணி கமலாபதியிலிருந்து சிஹார்சா சந்திப்புக்கு சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராணி கமலாபதி சஹர்சா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் (ரயில் எண் 01663) மத்தியப் பிரதேசத்தின் இடார்சியில் உள்ள ராணி கமலாபதியிலிருந்து சிஹார்சா சந்திப்புக்கு சென்று கொண்டிருந்ததாகவும் , அப்போது தடம் புரண்டதாகவும் தெரிகின்றன. இடார்சியில் ரயில் தடம் புரண்டதால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருக்கும் நிலைமையை நிர்வகிப்பதற்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவசர சேவைகள் உடனடியாக ரயில் விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை.  இந்த ரயில் விபத்தால் ரயில் பயணிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா