"விளைநிலங்கள் அழிப்பு; நிலத்தடி நீரும் காலி... மனசாட்சியற்ற நிறுவனம் NLC" - சௌமியா அன்புமணி கடும் கண்டனம்!
விளைநிலங்களை அழித்து நிலத்தடி நீரையும் உறிஞ்சிவிட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஒரு மனசாட்சியற்ற நிறுவனம் எனப் பாமகவைச் சேர்ந்த சௌமியா அன்புமணி கடுமையாகச் சாடியுள்ளார்.
என்.எல்.சி நிறுவனத்திற்காகத் தங்களது விளைநிலங்களையும் வாழ்வாதாரத்தையும் வழங்கிய உள்ளூர் மக்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்காமல் அந்நிறுவனம் தொடர்ந்து புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நிலம் கொடுத்த உள்ளூர் மக்களுக்கு நியாயமான வேலைவாய்ப்பை வழங்குவதற்குப் பதிலாகக் கடினமான நுழைவுத்தேர்வுகளை நடத்துவது "இது என்ன மருத்துவப் படிப்பா?" என்ற கேள்வியை எழுப்புகிறது.
என்.எல்.சி திட்டங்களால் நிலங்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் மண்ணின் மைந்தர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்பை எவ்விதக் கெடுபிடியுமின்றி உடனடியாக வழங்க அரசு மற்றும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
