வாராரு, வாராரு , அழகர் வாராரு... தேவா மறைந்தாலும்... அழகரை வரவேற்கும் அந்தக் குரல் என்றும் மறையாது!
Oct 17, 2026, 16:40 IST
இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தாலும், மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகரை வரவேற்கும் அவரது குரல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘கள்ளழகர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வாராரு வாராரு அழகர் வாராரு’ பாடலை தேவா பாடியுள்ளார். ஆண்டுதோறும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது இந்தப் பாடல் ஒலிபரப்பப்படுவது வழக்கம். இதைக் கேட்கும் பக்தர்கள் உற்சாகமடைவார்கள்.
“சாமி கண்டதும் பாதி சனங்க... சாதி மறந்து கூடுதே...” என்ற வரிகள், சாதி வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒன்றிணையும் உணர்வை வெளிப்படுத்துகின்றன. தேவா மறைந்தாலும், சித்திரைத் திருவிழாவில் அவரது குரல் மதுரை மக்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும்
