தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்... பழனியில் விநோத வழிபாடு!

 
பெரியகலையம்புத்தூர் மகாலட்சுமியம்மன் கோயில்

பழனி அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெரியகலையம்புத்தூர் மகாலட்சுமியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி ஆடி 1ம் தேதி முதல் பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக கரகாட்டம், கதம்ப நிகழ்ச்சி, சேவையாட்டம், நாதஸ்வர இன்னிசை உள்ளிட்டவை நடைபெற்றன. மலர்கள் மற்றும் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், அலங்கார தேரில் ஊர் முக்கிய வீதிகளில் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா