பக்தர்கள் ஏமாற்றம்... வேளாங்கண்ணி சர்ச் 24 மணி நேரமும் திறக்கப்படும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு - நிர்வாகம் அறிவிப்பு!

 
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர் பவனி

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை சர்ச் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி

சர்ச் 24 மணி நேரமும் திறந்திருந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்றும், இந்த முடிவைக் கைவிட வேண்டும் என்றும் வேளாங்கண்ணி பங்கு மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர்.

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பக்தர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் சர்ச்சினைத் தூய்மை செய்தல் போன்ற காரணங்களை முழுமையாக ஆராய்ந்த பின்னரே இது குறித்த அடுத்த கட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என சர்ச் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வழக்கம் போல அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே தனி ஜெபத்திற்காகச் சர்ச் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.