வைரல் வீடியோ... ரயில் இன்ஜினில் ஏறி கும்பமேளா செல்லும் பக்தர்கள் !
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிராயக்ராஜில் மகா கும்ப மேளாவில் நீராட உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதற்காக பல்வேறு வழிகளில் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.இதனால் ரயில் பயணத்திற்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.அந்த வகையில் வாரணாசி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை அன்று பயணிகள் ரயில் இன்ஜினில் ஏறி பயணிக்க முயற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ये तो हाल है रेलवे का. यात्री ट्रेन के इंजन में घुसे जा रहे हैं. तस्वीर वाराणसी की है.
— राहुल ग़ाज़ियाबाद (@RahulGhaziabadd) February 10, 2025
यह महाकुंभ स्पेशल ट्रेन का हाल है. यात्रियों ने इंजन में घुस पॉयलट के जगह पर क़ब्ज़ा कर लिया .फिर जैसे तैसे RPF ने इन जबरन घुसे यात्रियों को बाहर निकाला. pic.twitter.com/G4Dm7nT5Xf
மகா கும்பமேளாவில் நீராட எப்படியாவது செல்ல வேண்டும் எனவும் இருக்கைகள் பற்றாக்குறை காரணமாக சில பயணிகள் ரயில் எஞ்சின்களுக்குள் ஏறியுள்ளனர்.பயணிகள் என்ஜின் கேபினை வழக்கமான பெட்டியைப் போலக் கருதி, அதில் இருக்கும் அபாயங்கள் குறித்த தெளிவு எதுவும் அறியாமல் இன்ஜினுக்குள் ஏறிவிட்டனர். பயணிகள் உள்ளே சென்றவுடன் கதவை உள்ளே இருந்து பூட்டினர். இருப்பினும், ரயில்வே ஊழியர்கள் விரைவாக தலையிட்டு, சுமார் 20 நபர்களையும் என்ஜினிலிருந்து அகற்றி, இன்ஜினில் ஏறிஆக்கிரமித்து பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்தனர்.அந்த கேபினிலிருந்து பயணிகளைஅகற்றிய பிறகு, அதிகாரிகள் அவர்களுக்கு மற்ற ரயில் பெட்டிகளில் உட்கார ரயில்வே போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதிகரித்து வரும் கூட்ட நெரிசலால், பயணிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். ரயில்களின் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் ஏறி ஆபத்துக்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் ரயில்வே அதிகாரிகள் பயணிகளை வலியுறுத்தியுள்ளனர். கூட்டத்தை நிர்வகிக்கவும் அசம்பாவிதங்களைத் தடுக்கவும் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
