தொடரும் கனமழை... பிரதோஷம், பெளர்ணமிக்கு பக்தர்கள் சதுரகிரி மலையேறி தரிசிக்க தடை!
ஆவணி மாத வளர்பிறை பிரதோஷம் மற்றும் பெளர்ணமி வழிபாட்டுக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேறி சென்று தரிசிக்க தடை விதிக்கப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பம் சாப்டூர் வனச் சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மாதம்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய முக்கிய தினங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
இன்று ஆகஸ்ட் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமி வழிபாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, ஆவணி மாத பவுர்ணமி வழிபாட்டுக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
