குலசை முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
Aug 5, 2026, 18:20 IST
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உலகப் புகழ்பெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆடி கொடை விழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 3-ஆம் தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையுடன் கொடை விழா விமரிசையாகத் தொடங்கியது. விழாவின் தொடக்கமாகக் கோவிலில் பல்வேறு பக்தியிசை மற்றும் வில்லிசை நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற்றன.

விழாவின் முக்கிய நாளான நேற்று காலையில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. ஆடி கொடை விழாவை முன்னிட்டுத் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றிப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனைத் தரிசனம் செய்தனர்.
