திருநள்ளாறில் புரட்டாசி 2வது சனிக்கிழமை - சனீஸ்வரனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்!

 
திருநள்ளாறு கோயில் கோவில் தரிசனம் சனிப்பெயர்ச்சி பெயர்ச்சி வழிபாடு

பிரபலமான சனீஸ்வர பகவான் தலமான திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருநள்ளாறு

புரட்டாசி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் என்பதால், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே திருநள்ளாறில் குவிந்தனர்.

திருநள்ளாறு

இரண்டாம் சனிக்கிழத்தையொட்டி, சனீஸ்வர பகவானுக்கு சிறப்புத் திருமஞ்சனம், அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன. பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.