திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 6 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து தரிசனம்!

 
திருச்செந்தூர்

படைவீடுகளில் இரண்டாம் படைவீடாக விளங்கும் உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வார இறுதி நாள்களை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின், நீண்ட வரிசைகளில் பல மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், முருகனைத் தரிசிக்கும் ஆர்வத்தில் பக்தர்கள் தங்களது நீண்ட வரிசைப் பொறுமையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

பக்தர்களின் வருகை அதிக அளவில் இருப்பதால், கோவில் நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, காவல்துறையினரும் பாதுகாப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.