முண்டியடித்த பக்தர்கள்... மாதா சிலையின் கன்னத்தில் வடிந்த திரவத்தால் பரபரப்பு!

 
பழவேற்காடு

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே நடுவூர் மாதா குப்பம் பகுதியில், வீட்டில் வைத்து வழிபடப்பட்ட மாதா சிலையின் கன்னத்திலிருந்து எண்ணெய் போன்ற திரவம் வடிந்ததாக தகவல் பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ராஜன் மற்றும் சகாயமேரி தம்பதியர் தங்கள் வீட்டில் சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள மாதா சிலையை வைத்துத் தினமும் வழிபட்டு வந்துள்ளனர்.

May be an image of temple and text

சிலையின் கன்னப் பகுதியில் இருந்து எண்ணெய் போன்ற திரவம் வடிவதைக் கண்ட அவர்கள், அந்தச் சிலையை அருகிலுள்ள மகிமை மாதா ஆலயத்தில் ஒப்படைத்து வைத்துள்ளனர். இந்த தகவல் நடுவூர் மாதா குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வேகமாகப் பரவியதால், ஏராளமான பொதுமக்கள் மகிமை மாதா ஆலயத்திற்குச் சென்று சிலையைப் பார்வையிட்டனர்.

ஆலயத்தில் வைக்கப்பட்ட மாதா சிலையை முன்னிட்டு, பங்குத் தந்தை பாதிரியார் ரொசாரியா தலைமையில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து வழிபாடு நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது