இன்று தமிழகம் முழுவதும் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க சிறப்பு முகாம்!!

 
குடற்புழு நீக்க நாள்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தேசிய குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது இந்த மாதங்களில் இந்தியா முழுவதும் 19 வயதுக்குட்பட்ட சிறார் மற்றும் 30 வயதுக்குட்பட்ட வளரிளம் பெண்களுக்கு 'அல்பெண்டசோல்' குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.அதை போல் இன்றும்   தகுதியான அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  

குடற்புழு நீக்க நாள்

அதன்படி, ஆகஸ்ட் 17ம் தேதி இன்று தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் மூலமாக 19 வயது வரை உள்ள குழந்தைகள், சிறார்கள் மற்றும் 20முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் என மொத்தம் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த பணியில் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

குடற்புழு நீக்க நாள்

இன்று விடுபட்டவர்களுக்கு ஆகஸ்ட் 24ம் தேதி மாத்திரை வழங்கப்படும். இது குறித்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்ளாத நிலையில் சிறார்கள், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்த சோகை, வயிற்று உபாதைகள், சோர்வு நிலை   பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web