நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த டிஜிபி மருத்துவமனையில் அனுமதி!
கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநிலக் காவல் துறை டிஜிபி அலோக் குமார் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, மாநிலக் காவல் துறை தலைவர் (டிஜிபி) அலோக் குமார் எதிர்பாராதவிதமாகத் திடீரென மயங்கி விழுந்தார்.
வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்பட்ட தீவிர நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே அவர் மயக்கமடைந்தார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மயக்கமடைந்ததைத் தொடர்ந்து அவர் உடனடியாக அங்குள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீரடைந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இல்லம் திரும்பினார். டிஜிபி அலோக் குமார் தற்போது பூரண நலமுடன் இருப்பதாகக் கோவா காவல் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
