தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை தரல... பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்!

 
agarwal

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கிரிமினாலஜி பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெறத் தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வருகை தர வேண்டியிருந்தது. ஆனால் விழா மேடையில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்வில் அவர் நேரில் பங்கேற்காமல் முற்றிலும் புறக்கணித்துள்ளார். முக்கிய உயர் அதிகாரி ஒருவர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தது அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்? - தமிழக டிஜிபி பின்புலம்

விழா நிரலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாகப் பாடப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ் மொழியையும் அதன் அடையாளத்தையும் மதிக்கும் வகையில் விழா அமைப்பாளர்கள் செயல்படவில்லை எனக் கருதப்பட்டது. இதன் காரணமாகவே மனக்கசப்படைந்த அவர் அந்தப் பட்டமளிப்பு விழா நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் ​2,036 காவலர்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி ஆணை! | 2036 Police Personnel Transferred Across Tamil Nadu on Request; DGP Issues Orders ...

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு உரிய மரியாதை மற்றும் முன்னுரிமை வழங்கப்படாததே இந்த புறக்கணிப்புக்கு முதன்மை காரணம் எனத் தெரியவந்துள்ளது. காவல் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தமிழ் மொழி மரியாதையைக் காக்க விழாவைப் புறக்கணித்தது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்துப் பல்கலைக்கழக வட்டாரங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை காரணமாக டிஜிபி பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த இந்தச் சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.