அந்த அரபிக் கடலோரம்... அபார்மெண்ட்டின் மொத்த ப்ளாட்களையும் ரூ.118 கோடிக்கு வாங்கினார் கோடீஸ்வரர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா!

 
ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா

மறைந்த கோடீஸ்வரர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா தனது வீட்டிலிருந்து அரபிக்கடலின் தெளிவான காட்சியைப் பார்ப்பதற்காக, கடற்கரையின் அருகே, மலபார் ஹில்லில் உள்ள வாக்கேஷ்வர் சாலையில் உள்ள தெற்கு மும்பையில் உள்ள உயரமான கட்டிடடம் ஒன்றில் கிட்டத்தட்ட அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளையும் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

1666 சதுர அடி பரப்பளவில் பரவியுள்ள குடியிருப்பு ஒன்று கடலுக்கு எதிரே உள்ள ராக்சைட் சொசைட்டிக்கு பின்னால் உள்ளது, மேலும் அந்த குடியிருப்பு தற்போது மறுவடிவமைப்புக்காக உள்ள இந்த குடியிருப்பை ரேகா ஜுன்ஜுன்வாலா வாங்கியிருக்கிறார். 

வாக்கேஷ்வர் சாலையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. ரேகாவின் அரிய வில்லா குடியிருப்பு, கடலுக்கு எதிரே உள்ள ராக்சைட் சிஎச்எஸ்க்கு சற்றுப் பின்னால் உள்ளது, வாக்கேஷ்வர் சாலையில் உள்ள ராக்சைடு மற்றும் மேலும் ஆறு கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன. 

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா

 கடந்த ஆண்டு, ரேகா ஜுன்ஜுன்வாலா, பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (பிகேசி) மற்றும் அந்தேரி வெஸ்டில் உள்ள சண்டிவாலி ஆகிய இடங்களில் 1.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் உள்ள ஐந்து வணிக அலுவலக இடங்களை ₹739 கோடிக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஜுன்ஜுன்வாலா பங்குதாரராக இருக்கும் கின்டெயிஸ்டோ எல்எல்பி நிறுவனம், ஏற்கனவே பிகேசியில் உள்ள தி கேபிட்டலின் 14வது தளத்தில் சுமார் 26,422 சதுர அடி மற்றும் 30,172 சதுர அடியில் இரண்டு அலுவலகங்களை முறையே ₹123.99 கோடிக்கும் ₹145.32 கோடிக்கும் வாங்கியிருப்பதாக அக்டோபர் மாதம் அறிக்கையில் கூறியிருந்தது. 

ரேகா ஜுன்ஜுன்வாலா தனது வீட்டிலிருந்து கடலைப் பார்த்து ரசிப்பதற்ஆக, பழைய கட்டிடத்தின் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பையும் தனித்தனியே வாங்கியிருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் 118 கோடி ரூபாய்க்கு ஒன்பது அடுக்குமாடி குடியிருப்புகளை வெவ்வேறு டீலர்களிடமிருந்து வாங்கியதாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வெளியான தகவலலில், 24 அடுக்குமாடி குடியிருப்புகளில் 19யை ரேகா வாங்கியிருக்கிறார். 

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா

மறைந்த பங்கு முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா, இந்தியாவின் மிகப்பெரிய தனிநபர் முதலீட்டாளராக திகழ்ந்து வருகிறார். ரேகா ஜுன்ஜுன்வாலாவின் நிகர மதிப்பு டிசம்பர் மாத இறுதியில் ரூ. 39,333.2 கோடிக்கு மேல் இருந்தது, 

ரேகாவின் போர்ட்ஃபோலியோவில் டாடா குழுமப் பங்குகளான டைட்டன் கம்பெனி மற்றும் டாடா மோட்டார்ஸ், கான்கார்ட் பயோடெக், அவர்களின் விளம்பரப்படுத்தப்பட்ட நிறுவனமான ஸ்டார் ஹெல்த் மற்றும் அதனுடன் இணைந்த காப்பீட்டு நிறுவனம் உட்பட டாப் 5 ஷேர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web