தனுஷ் பிறந்தநாள் பரிசு... சிறப்பு போஸ்டர் வெளியீடு... ரசிகர்கள் கொண்டாட்டம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், நடிப்பையும் தாண்டி பின்னணிப் பாடகராகவும், பாடலாசிரியராகவும், ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர் ஆவார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனால், வசூலில் வெற்றி பெறும் என்றே தெரிகிறது.
Dhanush - #Kubera - New Poster pic.twitter.com/135rQ9whbW
— Aakashavaani (@TheAakashavaani) July 28, 2024
அதேநேரம், தனுஷின் 51வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘குபேரா’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த படம் பான் இந்தியப் படமாக உருவாகி வருகிறது.