மகளிர் அணிக்கு வெள்ளி விளக்குகளைப் பரிசளித்த தனுஷ்... 5 நிமிட சுருக்க உரையுடன் விடைபெற்றார்!
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற நற்பணி மன்ற மாநில மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் நேரில் பங்கேற்று, நிர்வாகிகளுக்கு வெள்ளி விளக்குகளைப் பரிசாக வழங்கினார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொட்டும் கனமழையைப் பொருட்படுத்தாமல் வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பெண் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நேரில் சந்தித்த நடிகர் தனுஷ், அவர்கள் அனைவருக்கும் சிறப்பு நினைவாக வெள்ளி விளக்குகளைப் பரிசாக வழங்கி கௌரவித்தார்.

அரசியல் பிரவேசம் குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே மேடையேறிய நடிகர் தனுஷ், நிகழ்ச்சியில் சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே மிகச் சுருக்கமாகப் பேசினார். அவர் பேசுகையில், "உங்கள் அனைவரையும் இந்தச் சந்திப்பின் மூலம் நேரில் கண்டதில் எனக்குப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வருகை தந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்" என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.
அரசியல் ரீதியிலான எந்தவொரு முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிடாத போதிலும், தனுஷின் இந்த எதிர்பாராத வெள்ளி விளக்கு பரிசளிப்பும், மகளிரணி சந்திப்பும் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
