தனுஷின் 'D 56' படப்பிடிப்பு தொடங்கியது... கருப்பணசாமி கோயிலில் 18 அடி அரிவாள் காணிக்கை!
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும் அவரது 56-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மாவட்டம் மாரநாடு கருப்பணசாமி கோயிலில் எளிய முறையில் பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
படத்தின் தொடக்கத்தையொட்டி, நடிகர் தனுஷ் மாரநாடு கருப்பணசாமி கோயிலில் சாமிக்கு 18 அடி நீளமுள்ள பெரிய அரிவாளைக் காணிக்கையாகச் செலுத்தி தனது வழிபாட்டைத் தொடங்கினார்.

இந்தத் தொடக்க விழாவில் நடிகர் தனுசுடன் இணைந்து இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, கதாநாயகி பிரீத்தி முகுந்தன் மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மதுரையை மையமாகக் கொண்டு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து சென்னையிலும் சில முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இப்படம் அடுத்த ஆண்டு (2027) கோடை விடுமுறைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
