தாராபுரம் 4-வது சுற்று முடிவிலும் அதிமுக வேட்பாளர் முன்னிலை!

 
தாராபுரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 4-வது சுற்று முடிவுகளின் நிலவரம் வெளியாகியுள்ளது.

4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் (தாராபுரம்): அதிமுக (பானுமதி): 10,773 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். தவெக (சத்யபாமா): 9,815 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். திமுக (சுகன்யா): 8,906 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 693 வாக்குகளையும், சுயேச்சை வேட்பாளர் லட்சுமணன் 207 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தாராபுரம் தொகுதியில் 4-வது சுற்று முடிவின்படி, தவெக வேட்பாளரை விட 958 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.