தாராபுரம் இடைத்தேர்தல்: சலூனில் முடி வெட்டியபடியே பிரசாரம் செய்த தவெக எம்எல்ஏ முஸ்தபா!
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக எம்எல்ஏ முஸ்தபா சலூனில் முடி வெட்டிக்கொண்டே வாக்கு சேகரித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ முஸ்தபா தாராபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவர் அங்குள்ள சலூன் ஒன்றுக்குள் சென்றார். அங்கு பொதுமக்களுடன் கலந்துரையாடியபடியே முடி வெட்டிக்கொண்டார். தொடர்ந்து சலூனில் இருந்தவர்களிடம் தவெக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தார்.சலூனில் எம்எல்ஏ முடி வெட்டிக்கொண்டே வாக்கு சேகரித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
