தருமபுரியில் ஒரே இரவில் 4 கடைகளில் கொள்ளை! ரூ.25000 பணம் திருட்டு!

 
தர்மபுரி

 

தருமபுரி நகரில் ஒரே இரவில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டுகளை உடைத்து, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சுமார் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு கொள்ளை சாரி

பூட்டை உடைத்து பணம் கொள்ளை

தருமபுரி நகரப் பகுதியில் வியாபாரிகள் வழக்கம்போல் இரவு கடைகளைப் பூட்டிவிட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் அங்கு வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், இரும்புக் கம்பியால் அடுத்தடுத்த 4 கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கடைகளின் கல்லாப்பெட்டிகளில் இருந்த ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். மொத்தம் சுமார் ரூ.25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரில் வழிப்பறி கொள்ளை!! மக்களே உஷார்!! இப்படியும் நடக்கலாம்!!

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

மறுநாள் காலை கடைகளைத் திறக்க வந்த உரிமையாளர்கள், பூட்டுகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளில், முகமூடி அணிந்த நபர்கள் திருட்டில் ஈடுபட்டது பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது. அந்தக் காட்சிகளின் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.