BREAKING... அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா... பெரும் பரபரப்பு!

 
dharmendra pradhan

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தீவிரப் போராட்டம் நடத்தி வந்தனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைமையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இந்த போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது. மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை மாணவர்கள் பிரதானக் கோரிக்கையாக முன்வைத்தனர். மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தனது மத்தியக் கல்வி அமைச்சர் பதவியை   ராஜினாமா செய்துள்ளார்.

தன் பதவியை ராஜினாமா செய்வதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தை அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தத் தகவலைத் தனது சமூக வலைதளப் பக்கத்திலும் அவர் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார். மாணவர்களின் நலன் மற்றும் நாட்டின் ஜனநாயகத்தின் மீதான மதிப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மத்தியக் கல்வி அமைச்சரின் இந்தத் திடீர் ராஜினாமா முடிவு இந்திய அரசியல் களத்திலும் நாடு முழுவதிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

Dharmendra Pradhan NEET CJP: How A Paper Leak Protest In 1997 Made Dharmendra Pradhan A Student Leader

மத்திய அமைச்சரின் ராஜினாமாவைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சமூகத்தின் ஒன்றுபட்ட போராட்டத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி இது எனத் தலைவர்கள் பெருமிதத்துடன் கருத்துத் தெரிவித்துள்ளனர். அரசின் பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே மத்திய அமைச்சர் ராஜினாமா கடிதத்தை அனுப்பியது மாணவர்களின் போராட்ட தீவிரத்தை உணர்த்துவதாக அமைந்தது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகிய சம்பவம் தேசிய அளவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.