ரசிகையின் காலில் விழுந்த தோனி... வைரல் வீடியோ...!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் தல ஆக கொண்டாடப்படுபவர் தோனி. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தாராளம். இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனும் ஆவார். உலகம் முழுவதும் அவரின் வாழ்த்துக்களை பெறவும் ஆசீர்வாதம் வாங்கவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.
#WATCH | ரசிகையின் காலில் விழுந்து வணங்கிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி!#SunNews | #MSDhoni pic.twitter.com/P4CaswndaZ
— Sun News (@sunnewstamil) November 16, 2023
அத்துடன் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கவும் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில், அவர் ஒரு பகுதிக்குச் சென்றபோது, அங்குள்ள தன் ரசிகர்கள் மற்றும் ரசிகைகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு ரசிகையின் காலில் விழுந்து வணங்கினார் தோனி. இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தோனியின் காலில் விழ பல வீரர்கள் தவமாய் தவமிருக்கையில் தோனி இத்தனை பண்புடன் ரசிகையின் காலில் விழுந்து வணங்கியுள்ளார். தோனியின் இந்த செயலுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!