மார்டன் பெண்ணை அழைத்தாரா மூத்த நடிகர் மாரிமுத்து? உண்மை என்ன?

 
மாரிமுத்து

அடிப்படையில் இயக்குநரான மாரிமுத்து கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. 

தற்போது திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். பைரவா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பிரபலமான படங்களிலும் இவர் நடித்திருந்தார். இவரின் துல்லியமான தமிழ் உச்சரிப்பும், மிடுக்கான உடல்வாகும் பலரையும் கவர்ந்தது என்றே கூறலாம்.  இதனால் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் மூத்த நடிகராகவும் உள்ளார். 

மாரிமுத்து

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்தத் தொடரில் ஆதி குணசேகரன் என்ற வேடத்தில் மாரிமுத்து கலக்கி வருகிறார். ஸ்லாங்கில் அவர் பேசும் விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் ஆபாச ட்வீட்களுடன் இருக்கும் போலி கணக்கு ஒன்று, மார்டன் உடை அணிந்த பெண் புகைப்படத்துடன் 'Can I Call You' என நடிகர் மாரிமுத்து என்று பெயருள்ள போலி ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு தங்களின் மொபைல் நம்பரை கேட்டு ட்வீட் செய்துள்ளது. அவரது பதிவிற்கு நடிகர் மாரிமுத்து என்ற பெயருடைய ட்விட்டர் ஐடியிலிருந்து நம்பர் பதிவிடப்பட்டிருக்கிறது.

வழக்கம்போல் இது நடிகர் மாரிமுத்துவின் ஒரிஜினல் ஐடியா இல்லை ஃபேக் ஐடியா என்பது கூட ஆராயாமல் நெட்டிஷன்கள் மாரிமுத்துவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மாரிமுத்து

இதையடுத்து, அந்த புகைப்படத்தில் உள்ள ட்விட்டர் கணக்கு போலியானது என்றும், நடிகரின் மொபைல் எண் பலரிடமும் உள்ளதால் யாரோ இதை தவறாக பயன்படுத்தியதாக நடிகர் மாரிமுத்துவின் மகன் அகிலன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் விளக்கம் அளித்தார். இதனை, நடிகர் மாரிமுத்து தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றிலும் உறுதிசெய்து, அந்த புகைப்படத்தில் உள்ளது போலி என விளக்கமளித்துள்ளார்.

From around the web