ப்ளையிங் கிஸ் கொடுத்தது குத்தமா?.. ஆயுர்வேத மருத்துவரை பொளந்து கட்டிய மனைவி!

 
 ப்ளையிங் கிஸ் 

திருவண்ணாமலை செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். ஆங்கில மற்றும் ஆயுர்வேத மருத்துவராக உள்ள இவர், நாகை மாவட்டம் தேவூரில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுதா தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி மருத்துவராக பணியாற்றி வருகிறார். 2008ல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக செந்தம்மில்செல்வனும், அவரது மனைவி சுதாவும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவை மீறி மகனைப் பார்க்க மனைவி சுதா மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சுதா சித்தா டாக்டராக பணியாற்றிய தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செந்தம்மில்செல்வன் சென்றபோது, சுதா மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தலை மற்றும் கால்களில் பலத்த காயம் அடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, மாமனார் தன்னிடம் இருந்து 200 பவுன் நகைகளை திருடிச் சென்றுவிட்டதாகவும், மனைவியை தன்னுடன் சேரவிடாமல் தடுப்பதாகவும், இதனால் மனைவி என்னை அடித்துக் கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் கூறினார். மேலும் மருத்துவமனைக்கு நோயாளியாக சென்ற எனக்கு சிகிச்சை அளிக்காமல் என்னை தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறினார். இதுகுறித்து சித்தா டாக்டர் சுதாவிடம் கேட்டபோது, தங்களுக்குள் விவாகாரத்து நிகழ்ந்துவிட்டது. இருப்பினும், இவர் தினமும் மருத்துவமனைக்கு வந்து ப்ளையிங் கிஸ் கொடுத்து தொந்தரவு செய்வதாகவும் கூறினார். மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் சித்த மருத்துவர் ஆயுர்வேத மருத்துவரை தாக்கிய சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web