’செத்து போ’.. திட்டிய மாமனார்.. விரக்தியில் காவலர் எடுத்த விபரீத முடிவு!

 
திப்பண்ணா

கர்நாடகா மாநிலம் ஹுளிமாவு காவல் நிலையத்தில் தலைமை காவலவராக பணியாற்றி வந்தவர் திப்பண்ணா (33). இவர் 2021 இல் திருமணம் செய்து கொண்டார், ஆனால் தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையே திப்பண்ணாவிடம் அவரது மனைவி மற்றும் மாமனார் தொடர்ந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி (நேற்று) இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது, ​​திப்பண்ணாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பின், வீட்டை விட்டு வெளியேறிய திப்பண்ணா பைப்பனஹள்ளி பகுதி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே திப்பண்ணா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

போலீஸ்

அதில், கடந்த 12ம் தேதி மாமனார் மிரட்டி, ''நீ இறந்தால் என் மகள் நிம்மதியாக இருப்பாள்'' என கூறியதாக திப்பண்ணா குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் திப்பண்ணாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது மனைவி மற்றும் மாமனார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் அதுல் சுபாஷ் என்ற நபர் பெங்களூரில் தனது மனைவி குடும்பம் தன்னை துன்புறுத்துவதாக வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் தற்போது காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!