பொதுமக்கள் கடும் அவதி... டீசல் விலை உயர்வால் அரசு பேருந்துகள் குறைப்பு!

 
பேருந்து பேருந்து

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது அண்மையில் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் டீசல் விலை அதிகரிப்பால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கமாக இயக்கப்படும் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை தற்காலிகமாகப் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (டிசம்பர் 08) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

அரசு பேருந்துகளின் எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டதால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் தினசரி பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பேருந்து நிலையங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன், வரும் ஒரு சில பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுவதால் பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல இடங்களில் பேருந்துகளைச் சிறைபிடித்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் தங்களின் பலத்த எதிர்ப்புகளைப் பதிவு செய்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பெட்ரோல் டீசல்

போக்குவரத்துக் கழகங்களின் தினசரி நஷ்டம் அதிகரித்து வருவதே இந்த நிலைக்குக் காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பேருந்து சேவைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உயர்த்தப்பட்ட டீசல் விலையை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை மாற்று ஏற்பாடுகளைச் செய்து பொதுமக்களின் சிரமத்தைப் போக்க வேண்டும் என்றும் போராட்டக் களத்தில் உள்ள மக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.