செப்.25ல் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் உசிலம்பட்டியில் தொடக்கம் - டிஐஜி அபினவ்குமார் நேரில் ஆய்வு!
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வரும் செப்டம்பர் 25-ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
இத்திட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இத்திட்டத்தை முதலமைச்சர் விஜய் நேரில் தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத்திட்டத் தொடக்க விழா நடைபெறவுள்ள இடத்தை ஆய்வு செய்யும் பணியில் தென்மண்டல டிஐஜி அபினவ்குமார் தலைமையிலான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். விழா நடைபெறும் இடத்தை இறுதி செய்வது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் அவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
