டிரைவிங் லைசென்ஸ் இனி கையில் வராதா? தமிழகத்தில் இன்று முதல் புதிய நடைமுறை - முழு விவரம்

 
டிரைவிங் லைசன்ஸ்

 

தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறையில் இன்று (செப்.15) முதல் முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இனி ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். இதனால், லைசென்ஸ் அட்டை தபால் மூலம் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் குறைகிறது.

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அன்றே லைசென்ஸ் கிடைக்குமா?

ஆம். புதிய நடைமுறையின்படி, ஓட்டுநர் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைன் மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் லைசென்ஸ் வழங்குவதற்காக பல நாட்கள் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படுகிறது.

டிஜிட்டல் லைசென்ஸை எப்படி சரிபார்ப்பது?

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தில் QR Code இடம்பெறும். இதனை ஸ்கேன் செய்வதன் மூலம் உரிமம் தொடர்பான விவரங்களை அரசு தரவுத்தளத்தில் சரிபார்க்க முடியும். மேலும், ஆவணம் தேவைப்படும் நேரத்தில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

இனிமே லைசென்ஸ் டிஜிட்டல் தான்: செப்டம்பர் 13 முதல் புதிய வசதி – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு - driving licence goes digital in tamil nadu new facility to begin from september 13 ...

Physical Driving Licence முற்றிலும் நிறுத்தப்படுகிறதா?

புதிய நடைமுறையில், செப்.15 முதல் வழங்கப்படும் புதிய DL மற்றும் RC ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுகின்றன. QR Code கொண்ட டிஜிட்டல் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இந்த மாற்றத்துடன் வாகனப் பதிவுச் சான்றிதழான RC-க்கும் டிஜிட்டல் வழங்கல் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு இது தொடர்பான நடைமுறை வேறுபடலாம். எனவே புதிய லைசென்ஸ் பெறுபவர்கள் அதிகாரப்பூர்வ போக்குவரத்துத் துறை சேவையில் தங்கள் ஆவண நிலையை சரிபார்ப்பது நல்லது.