புவிசார் குறியீடு பெற்றும் நலிவடையும் திண்டுக்கல் பூட்டுத் தொழில் - பாரம்பரியத்தைக் காக்க அரசுக்குக் கோரிக்கை!
தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றான திண்டுக்கல் பூட்டுகளுக்குப் புவிசார் குறியீடு கிடைத்தும், இத்தொழில் தற்போது கடுமையான சவால்களைச் சந்தித்து வருகிறது.
திண்டுக்கல் பூட்டுகளின் பாரம்பரியச் சிறப்பைப் போற்றும் வகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதற்கு அதிகாரப்பூர்வமாகப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

1980-களில் இப்பாரம்பரியத் தொழிலில் சுமார் 1,800-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தற்போது இயந்திரத் தயாரிப்புப் பூட்டுகளின் வருகை மற்றும் சந்தைப் போட்டியால் இப்பணியில் வெறும் 200 பேர் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர்.
கைவினைப் பூட்டுகளைத் தயாரிப்பதற்கு அதிக உழைப்பும் நேரமும் தேவைப்படுவதால், அவற்றின் விலை சற்று அதிகமாக உள்ளது. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டுத் தொழிலாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காலங்காலமாகத் தொடரும் இத்தமிழகத்தின் பாரம்பரியக் கைவினைத் தொழிலைக் காப்பாற்றவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
